×

சாலையில் வீசும் முகக்கவசங்களால் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து: தனி குப்பைத் தொட்டி அமைக்குமா மாநகராட்சி?

சென்னை: பயன்படுத்திய முககவசங்களை போட தனி குப்பைத் தொட்டி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  பயன்படுத்தபட்ட  முககவசங்கள், கையுறைகள், தலையுறைகள் போன்றவற்றை அப்படியே தூக்கி எறியும்போது மற்றவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அதை முறைப்படி அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இதன்படி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மஞ்சள் நிற குப்பை தொட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் பயன்படுத்த மருத்துவ பொருட்களை போடலாம். இது பாதுகாப்பாக ஊழியர்களால் அகற்றப்படும் என்பதால், மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. இதேபோல், மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவிலும் மஞ்சள் குப்பைத் தொட்டிகள் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கேரளாவிலும் இதுபோன்ற பயன்படுத்தப்பட்ட கையுறைகள், முகக்கவசங்களை போடுவதற்கு தனி குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பயன்படுத்தப்பட்ட முகக்கவசம் மற்றும் கையுறைகளை தனியாக ஒரு கவரில் போட்டு அதன் உள்ளே கிருமிநாசினி தெளித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.  ஆனால் பலர் இதை முறையாக செய்வது இல்லை.  வழக்கமான குப்பையுடன் சேர்த்து முககவசங்களை கொட்டிவிடுகின்றனர். சிலர் சாலைகளில் வீசி விடுகின்றனர். சில தனியார் மருத்துவமனை–் டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பயன்படுத்தும் கவச உடைகளையும் சாலைகளில் வீசுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன் மூலம் கொரோனா பரவும் ஆபத்து உள்ளது. எனவே தனி குப்பைத் தொட்டியை மாநகராட்சி அமைப்பது கட்டாயம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை இணை ஆணையர் மதுசூதன் ரெட்டியிடம் கேட்டபோது, நோய் கட்டுப்பாடு பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மஞ்சள் நிற பைக் வழங்கப்படுகிறது. இவர்கள் பயன்படுத்தும் முககவசம் மற்றும் கையுறைகளை இவற்றில் போட்டு தனியாக அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, என்றார்.

தினமும் 10 டன் குப்பை
சென்னையில் பொதுமக்களிடம் பெறப்படும் முகக்கவசம் மற்றும் கையுறைகள் தனியாக கையாளப்பட்டு மணலியில் உள்ள மாநகராட்சி குப்பை மறுசுழற்சி மையத்தில் எரிக்கப்பட்டுவருகிறது. இதன்படி தினசரி 7 முதல் 10 டன் வரை எரிக்கப்படுகிறது.


Tags : garbage bin , Risk , coronavirus infection , road-blowing masks, Setting , separate trash can?
× RELATED ராஜபாளையம் அருகே முத்துசாமிபுரத்தில்...